Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.கே.நகர் எங்கே இருக்குதுன்னு கமலுக்கு தெரியுமா? பொதுமக்கள் கொதிப்பு

Advertiesment
kamal hassan
, வியாழன், 4 ஜனவரி 2018 (22:44 IST)
சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்து நடிகர் கமல்ஹாசன் பத்திரிகை ஒன்றில் எழுதியபோது, இன்று 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளீர்கள். இது பிச்சை எடுப்பது போன்ற கேவலம். அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா? என்று ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தினகரனையும், அவருக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த பொதுமக்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ஏற்கனவே டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ள நிலையில் தற்போது ஆர்.கே.நகர் பொதுமக்களும் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி எங்கே இருக்குதுன்னு கமலுக்கு தெரியுமா? இந்த தொகுதியின் பிரச்சனைகள் என்ன என்றே தெரியாத ஒருவர் கமல் என்றும், நாங்கள் காசு வாங்கியதை கமல் பார்த்தாரா? யாரோ சொல்வதை வைத்து கமல் கூறியது கண்டிக்கத்தக்கது என்றும், கமல் தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்று ஆர்கே நகர் தொகுதி மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கொதிப்புடன் கூறியுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சரின் அறிவிப்புக்கு பின்னரும் தொடரும் வேலைநிறுத்தம்