Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீஃபெக்ஸ் குழுமம் மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி கொண்டாடிய ‘சாலை போக்குவரத்து வாரம்’

Mahendran
சனி, 13 ஜனவரி 2024 (11:54 IST)
சாலை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் நிகழ்வை ரீஃபெக்ஸ் குழுமம் சிறப்பாக நடத்தியிருக்கிறது.  போக்குவரத்து விதிகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுவது மற்றும் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவதன் அவசியத்தை வலியுறுத்துவதே இந்த முன்னெடுப்பு நிகழ்வின் நோக்கமாகும்.  ஜனவரியை நமது நாடு ‘சாலை பாதுகாப்பு மாதமாக’ அனுசரித்து வருகின்ற நிலையில் ஜனவரி 11-ம் தேதியன்று  இந்த இரு நாட்கள் நடத்தப்படும் நிகழ்வை ரீஃபெக்ஸ் தொடங்கியது.  
 
சென்னை மாநகரின் பஸுல்லா சாலை சந்திப்பு அமைவிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ராமகிருஷ்ணா பள்ளியின் மாணவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.  சாலை விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை நம் நாட்டின் எதிர்கால சிற்பிகளான இளையோரும், மாணவர்களும் இதனை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாணவர்களின் பங்கேற்பு இருந்தது.  
 
ஜனவரி 12-ம் தேதியன்று ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்வில், ரீஃபெக்ஸ் குழுமத்தின் பணியாளர்களும், உயரதிகாரிகளும், சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையிலேந்தி பங்கேற்றனர்.  சாலை பாதுகாப்பு என்ற தலைப்பு மீது பள்ளி குழந்தைகளுக்காக படம் / ஓவியம் வரையும் போட்டியையும் அடுத்த வாரம் நடத்த இக்குழுமம் திட்டமிட்டிருக்கிறது.  அந்நிகழ்வின்போது பள்ளி மாணவர்களுக்காக சென்னை மாநகரின் போக்குவரத்து காவல்துறை உயரதிகாரி, சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி சிறப்புரையாற்றுவார்.  
 
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், சாலை விபத்துகள் குறித்து வெளியிட்டிருக்கும் வருடாந்திர அறிக்கையின்படி 2022-ம் ஆண்டில், சாலை விபத்துகளின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு, அதற்கு முந்தைய ஆண்டைவிட 9.4% அதிகரித்திருக்கிறது.  அந்த ஆண்டில் 1.68 இலட்சம் நபர்கள் இவ்விபத்துகளில் உயிரிழந்திருக்கின்றனர்; மேலும், நடைபெற்ற விபத்துகளின் மொத்த எண்ணிக்கையும் முந்தைய ஆண்டை விட 11.9% உயர்ந்திருக்கிறது.  

 
தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் தேசத்தின் நலன் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கும் ரீஃபெக்ஸ் குழுமம், மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு குடிமக்களாகிய அனைவருக்கும் பொறுப்பும், கடமையும் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறது.  இதன் காரணமாக, சாலை பாதுகாப்பை உறுதிசெய்ய அவசியமான விழிப்புணர்வை உருவாக்கும் இந்த சீரிய நடவடிக்கையை அது மேற்கொண்டு வருகிறது.  
 
பொறுப்புணர்வு மிக்க ஒரு நிறுவனமாக திகழும் ரீஃபெக்ஸ் – ல் உடல்நலமும், பாதுகாப்பும் அதன் முக்கிய முன்னுரிமைகளாக எப்போதும் இருந்து வருகின்றன.  பணியாளர்கள், இணைந்து செயல்படும் பங்குதாரர்கள் மற்றும் பணி அமைவிடங்களுக்கு அருகிலுள்ள சமூகங்களின் நலவாழ்வு முதன்மையானது என்பதை அது உணர்ந்து செயலாற்றுகிறது.  இதன் தினசரி செயல்பாடுகளில் போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கின்ற நிலையில் இந்த பொறுப்புறுதியின் ஒரு முக்கிய அம்சமாக சாலைப் பாதுகாப்பை ரீஃபெக்ஸ் கருதுகிறது.  
 
சாலை பாதுகாப்பை வலியுறுத்துவதன் மூலம் போக்குவரத்தோடு தொடர்புடையதாக ஏற்படும் விபத்துகள், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை நம்மால் குறைக்க முடியும்.  இதன்மூலம், விலைமதிப்பில்லாத மனித உயிர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்படும் பங்களிப்போடு அதன் பணியாளர்கள் மற்றும் சேவையாற்றும் சமூகங்களின் ஒட்டுமொத்த நலனையும் பாதுகாக்க முடியும் என்று அது நம்புகிறது. உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மீதான இந்த வலுவான கலாச்சாரமும், அதை செயல்படுத்தும் நடவடிக்கைகளும் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் மீது நேர்மறை தாக்கத்தை உருவாக்கி,பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் திருப்தியுணர்வை அவர்களிடம் வளர்க்கிறது.  
சுற்றுச்சூழல், சமூக நலன் மற்றும் ஆளுகை (ESG) என்ற  விரிவான செயல்திட்டத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக சாலை பாதுகாப்பு இடம்பெற்றிருக்கிறது.  வளம்குன்றா நிலைப்புத்தன்மை மற்றும் பொறுப்புள்ள பிசினஸ் நடைமுறைகள் மீதான இக்குழுமத்தின் குறிக்கோளோடு சாலைப் போக்குவரத்தின் மீதான முன்னுரிமை பின்னிப் பிணைந்திருக்கிறது.  பொறுப்புடன் வாகனங்களை இயக்கும் பழக்கவழக்கங்களை முன்னிலைப்படுத்துவது மற்றும் பாதுகாப்பான சாலைகள் அமைக்க வலியுறுத்துவது ஆகியவற்றின் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனுக்கு இணக்கமானதாக தனது பிசினஸ் செயல்பாடுகள் இருப்பதை இக்குழுமம் உறுதி செய்கிறது.  சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படும் இந்த மாதத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கும் பல்வேறு முன்னெடுப்புகளை நடத்துவதன் மூலம் வளம்குன்றா நிலைப்புத்தன்மையுடன் முன்னேற்றத்தை காணவேண்டும் என்ற நோக்கத்திற்கு இக்குழுமம் நல்ல பங்களிப்பை வழங்குகிறது.  
 
பெருநிறுவன சமூக பொறுப்புறுதியின் (CSR) ஒரு அங்கமாகவும் இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இந்த ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை, ESG மீதான இதன் பொறுப்புறுதியை வெறும் பேச்சு வடிவிலான கொள்கை ஆவணமாக இருப்பதற்குப் பதிலாக, நாம் வாழும் உலகம் மற்றும் மக்கள் மீது நேர்மறை தாக்கத்தை உருவாக்கும் துடிப்பான செயல்பாடாக ஆக்குவதே ரீஃபெக்ஸ் குழுமத்தின் நோக்கம்.  
 
ரீஃபெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. அனில் ஜெயின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை குறித்து பேசுகையில், “உடல்நலம் மற்றும் பாதுகாப்பு எமது பொறுப்பான நிறுவனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.  இக்குறிக்கோள் மீது எமது தளராத பொறுப்புறுதியை செயல் நடவடிக்கைகளின் மூலம் உறுதி செய்வதில் நான் பெருமையடைகிறேன்.  உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மீதான இப்பொறுப்புறுதி தான் எமது நிறுவனத்தில் ஒரு சிறப்பான கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கிறது.  
 
எமது பணியாளர்கள் மனங்களில் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் திருப்தியுணர்வை ஆழமாக பதியச் செய்திருக்கிறது.  எமது தொழிலகங்கள், அலுவலகங்கள் என்பதையும் கடந்து மக்கள் மத்தியில் பொறுப்புள்ள வாகன இயக்க வழக்கங்களை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பான சாலைகள் அமைக்க  வலியுறுத்துவது என எமது கூர்நோக்கம் மிக விரிவானது.  நிலைப்புத்தன்மையுள்ள எதிர்காலத்தின் மீதான எமது பொறுப்புறுதியை பிரதிபலிக்கும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் குறிக்கோள்களோடு எமது பிசினஸ் செயல்பாடுகளும் ஒத்திசைவாக இணைந்து பயணிப்பதை இந்த கூர்நோக்கம் உறுதிசெய்கிறது.  
 
பொறுப்புள்ள பிசினஸ் செயல்பாடுகள் மற்றும் நிலைப்புத்தன்மை மீதான எமது அர்ப்பணிப்போடு சாலைப் பாதுகாப்பு மீதான வலியுறுத்தலும் இணைந்து எமது ESG பயணத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக நடைபோடுகின்றன.” என்று கூறினார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

GATE 2025 தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!

மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. புரோக்கராக மாறிய 2வது கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி

தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.. அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments