Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூது கவ்வும் போல் நடந்த சம்பவம் - வழி செலவுக்கு 600 ரூபாய் கொடுத்த திருடர்கள்

Webdunia
சனி, 26 மே 2018 (11:02 IST)
சென்னையில் சூது கவ்வும் பட பாணியில் சகோதரர்களை கடத்திய மர்ம நபர்களை 33 லட்சத்தை பறித்துக்கொண்டு வழிச்செலவுக்கு ரூ.600 கொடுத்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாம்னலத்தை சேர்ந்த மோகன் என்பவர் இவரது தம்பி கணேசன் உள்ளிட்ட 5 பார்ட்னர்களுடன் சேர்ந்து பைனான்ஸ் கம்பெனி நடத்தி வருகின்றனர். 
 
கடந்த சில தினங்களுக்கு முன் மோகன் உள்ளிட்டோருக்கு சரவணக்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சரவணக்குமார் தனக்கு ஏராளமான தொழிலதிபர்களை தெரியும் என்றும் அவர்கள் வட்டிக்கு பணம் வாங்கினால் தவறாமல் பணம் தந்து விடுவார்கள் என்றும் சரமாரியாக அளந்து விட்டிருக்கிறார். இதனை மோகனும் அவரது பார்ட்னர்களும் நம்பிவிட்டனர்.
 
இந்நிலையில் மோகனை தொடர்புகொண்ட சரவணக்குமார், தொழிலதிபர் ஒருவர், தனது நிலத்தை அடமான வைத்து வட்டிக்கு பணம் கேட்கிறார். நாம் போய் அவரது நிலத்தை பார்த்து வருவோம் என கூறியுள்ளார். இதனை நம்பிய மோகன் மற்றும் அவரது பார்ட்டனர் ஒருவர் சரவணக்குமாருடன் காரில் சென்றுள்ளனர்.
 
சிறிது நேரத்தில் மோகன் மற்றும் அவரது பார்ட்னரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர் சரவணக்குமாரும் அவனது கூட்டாளிகளும்.
 
இதனையடுத்து  மோகனின் தம்பி கணேசனுக்கு போன் செய்த சரவணக்குமார், சூதுகவ்வும் படத்தில் வருவது போல் உனது அண்ணனையும் பார்ட்னரையும் கடத்தி விட்டதாக கூறியுள்ளான். மேலும் பதற்றப்படாமல் சொல்வதை கேள் போய் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு வா என்று கூறியுள்ளான். பின் உன் அண்ணனை உயிரோடு விட வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளான்.
 
அடுத்ததாக உங்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா என கேட்டுள்ளான் சரவணக்குமார். கணேசன் அவ்வளவு பணம் இல்லை 33 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
 
இதனையடுத்து கோயம்பேட்டில் வைத்து 33 லட்சம் ரூபாயை கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார் மோகன்.
பின் மோகன் மற்றும் அவரது பார்ட்னரை விடுவித்த கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்த 28 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு இருவருக்கும் வழிச்செலவுக்கு தலா ரூ.300 வீதம் 600 ரூபாய் பணத்தை கொடுத்து வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு தப்பித்துச்சென்றனர்.
 
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சரவணக்குமாரின் புகைப்படத்தை வைத்து  போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments