பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சார்ந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் பூந்தமல்லி பைபாஸில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் பின்வருமாறு…
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் வழக்கமான சென்னை அவுட்டர் ரிங் ரோட் சர்வீஸ் ரோட்டில் இடதுபுறம் திரும்பி செல்கின்றன.
அவ்வாறான வாகனங்கள் மட்டும் வழக்கமாக இடதுபுறம் திரும்பும் இடத்தில் திரும்பாமல் மெயின் ரோட்டிலேயே அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தாண்டி சென்று 2 வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடது புறமாக செல்ல வேண்டும்.
சென்னை அவுட்டர் ரிங் ரோட்டில் வண்டலூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் இடதுபுறம் திரும்பி நெடுஞ்சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்கின்றன.
அந்த வாகனங்கள் அனைத்தும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் சென்னை அவுட்டர் ரிங் ரோட் பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பாமல் சென்னை அவுட்டர் ரிங் ரோட்டில் நேராகச் சென்று கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடிக்கு முன்பு 'யு டர்ன்' போட்டு பூந்தமல்லி பைபாஸ் பகுதி வரை வந்து பின்னர் நெடுஞ்சாலையில் இணையலாம்.