Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை பேருந்து நிலையம் கட்டுமானத்தில் ரூ.100 கோடி முறைகேடா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (15:46 IST)
நெல்லை பேருந்து நிலையம் கட்டுமானத்தில் ரூ.100 கோடி முறைகேடு நடந்திருக்கலாம் என்று கூறப்படுவதால் அதுகுறித்து விசாரிக்க சிபிசிஐடி உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திமுக ஆட்சி நடைபெற தொடங்கியதிலிருந்தே பல்வேறு ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் இருப்பது தெரியவந்து உள்ளது 
குறிப்பாக கீழ்நெல்லை பேருந்து நிலைய கட்டுமானத்தின் போது ரூபாய் 100 கோடி மதிப்பில் தாமிரபரணி ஆற்று மணல் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது குறித்து சிறப்பு விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் விசாரணையில் உதவிக்காக சென்னை பல்கலை புவியியல் துறை மற்றும் இந்திய அணு தாதுக்கள் துறையை உதவியை நாடலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடித்து அறிக்கை தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments