தேமுதிக கூட்டங்களுக்கு கட்சி வேஷ்டி கட்டாமல் வந்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
தேமுதிக அரசியலில் சரிவை சந்தித்து வரும் நிலையில், கட்சியின் நிர்வாகிகளே தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் நேரங்களில் கூட்டணி குறித்து சரியான முடிவெடுக்கவில்லை போன்ற பல விஷயங்களில் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று தேமுதிக கட்சி அலுவலகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்ததில் பெரும்பாலானோர் கட்சி வேட்டியுடன் வரவில்லையாம்.
இதனால், கடுப்பான மாஜி எம்எல்ஏ வெங்கடேசன், இனிமேல் தேமுதிக நிகழ்ச்சிகளுக்கு கட்சி வேட்டி இல்லாமல் வருபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார். தலைமை ஒப்புதலுடன் இதை கூறினாரா, இல்ல தானாகவே இதை கூறி என தெரியாத நிலையில் மாஜி எம்எல்ஏவின் உத்தரவால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.