Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

விஜயகாந்துடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

விஜயகாந்துடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?
, புதன், 25 செப்டம்பர் 2019 (20:18 IST)
வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் இன்று காலை அறிவிக்கப்பட்டனர். விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதியில் வெ. நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த இரு வேட்பாளர்களையும் ஆதரிக்கும்படி கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சென்று தமிழக அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
 
இந்த நிலையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சற்றுமுன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டனர். விஜயகாந்த்தும் ஆதரவு தருவதாக வாக்களித்துள்ளார். முன்னதாக கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட தயார் என விஜயகாந்த் மகன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் ஆதரவு கொடுத்துள்ளதால் தேமுதிக தொண்டர்கள் நாளை முதல் பிரச்சார களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
webdunia
அதேபோல் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு என அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள் ஆதரவு கேட்டதன் அடிப்படையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். விரைவில் அதிமுக அமைச்சர்கள் பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் அவர்களை சந்திப்பார்கள் என கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மீன் விலை வீழ்ச்சி! – அசைவ பிரியர்கள் குஷியோ குஷி!