சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 5 ஏக்கர்களுக்கு குறைவாக உள்ள நலிந்த விவசாயிகளுக்கு வருடம் ஒன்றுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வருடத்திற்கு ரூ.6000 என்றால் மாதம் ஒன்றுக்கு ரூ.500 மட்டுமே! இதையும் நாள் கணக்கில் கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டுமே கிடைக்கும். 17 ரூபாயை வைத்து கொண்டு ஒரு விவசாயி தனது குடும்பத்தை எப்படி காப்பாற்ற முடியும் என ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்
இந்த நிலையில் கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.6000 உதவித்தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு ரூ.17 அனுப்பும் போராட்டத்தை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மட்டுமின்றி விழுப்புரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் ரூ.17 அனுப்பும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் நலிந்த விவசாயிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.