Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உளராத மேன்... பொன்னாருக்கு பொளேர் விட்ட பாரதி!!

உளராத மேன்... பொன்னாருக்கு பொளேர் விட்ட பாரதி!!
, திங்கள், 18 நவம்பர் 2019 (13:07 IST)
முடிந்தால் பஞ்சமி நிலம் குறித்த ஆதாரத்தை வெளியிடுங்கள் என பாஜ்க மூத்த தலைவர்  பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆர்.எஸ்.பாரதி சவால். 

 
சமீபத்தில் அசுரன் திரைப்படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பஞ்சமி நில மீட்பை பேசும் அசுரன் திரைப்படம் படல் அல்ல, பாடம் என பகிர்ந்தார். ஸ்டாலினின் டிவிட்டை குறிப்பிட்டு, பாமக தலைவர் ராமதாஸ், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்திற்காக வலைக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்தார். 
 
ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின், முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என அந்த நிலத்திற்குரிய பட்டாவை காட்டினார். இருப்பினும் அன்று துவங்கிய முரசொலி பஞ்சமி நில விவகாரம் இன்று வரை முடியாமல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. 
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக அறைக்கட்டளைக்கு சொந்தமான நிலம் பஞ்சமி நிலம் என கூறப்படுகிறது. அந்த நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் ஸ்டாலின அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். 
 
முரசொலி நிலம் ரூ.5 கோடி மதிப்பு என கூறப்படுகிறது. ஸ்டாலின் அந்த நிலத்தை அரசுக்கு கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு ரூ.5 கோரி இழப்பு என்றால், அந்த 5 கோடியை பாஜக தர தயாராகவுள்ளது என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்.எஸ் பாரதி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பொன்.ராதாகிருஷ்ணன் திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம். திமுகவை பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டில் இருந்து வெளிச்சதிற்கு வரலாம் என கணக்கு போடவும் வேண்டாம். முடிந்தால் முரசொலி பஞ்சமி நிலம் என்பதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என சவால் விட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்த மகள் திரும்பி வர பிராத்தனை – மூன்று நாட்களாக உடலை புதைக்காத குடும்பத்தினர் !