தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி முறைகேடு வழக்கு தொடுக்க சொல்லி விடுத்த மனுக்களை திரும்ப பெற்றார்.
தமிழகத்தில் சாலைகள் அமைக்க டெண்டர் விடுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதேபோல கிராமங்களுக்கு இணைய வசதி அளிக்கும் பைபர்நெட் டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளதாக திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுக்க விடுத்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார் ஆர்.எஸ்.பாரதி. அரசு டெண்டர் குறித்து அளித்த விளக்கங்களை ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் மனுவை திரும்ப பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவதூறு வழக்கில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானதற்கும், தற்போது முதல்வர் மீதான முறைகேடு மனுக்களை ஆர்.எஸ்.பாரதி திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதற்கு சம்பந்தம் உண்டா என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.