Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் ஆர்என்ஜி சாலையில் சசிகலாவை பார்த்து அதிர்ந்துவிட்டேன்: ரூபா பகீர் பேட்டி!

பெங்களூர் ஆர்என்ஜி சாலையில் சசிகலாவை பார்த்து அதிர்ந்துவிட்டேன்: ரூபா பகீர் பேட்டி!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (16:26 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா குறித்து தினம் தினம் பல தகவல்களை வெளியிட்டு வரும் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா, சசிகலா ஆர்என்ஜி சாலையில் சுற்றியதை காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பார்த்ததாக திகிலை கிளப்பியுள்ளார்.


 
 
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறை விதிகளை மீறி சொகுசாக இருக்க பல சலுகைகளை பெற்றதாக அப்போது சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
 
இதனையடுத்து அது தொடர்பான விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணை ஆணையத்திடம் ரூபா தன்னிடம் உள்ள சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்தார். அதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கையில் பையுடன் வெளியே எங்கேயோ சென்று வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் ரூபா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் நான் சொல்லாத ஒரு விஷயத்தை அவர் கூறியுள்ளார்.
 
ஒருமுறை சசிகலாவை ஆர்என்ஜி சாலையில் பார்த்ததாகவும், அதனை கண்டு தாம் அதிர்ச்சியுற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் நம்மைத்தான் மனநிலை சரியில்லாதவர் என கூறுவார்கள் என்பதால் அமைதியாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். இதனை அந்த கடிதத்தை படித்து பார்த்து ரூபா தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments