Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு என்னைப் பற்றி தெரியும்… நான் போனில் சொன்னாலே 5000 ஓட்டு மாறும் – எஸ் வி சேகர் பெருமிதம்!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:09 IST)
மோடிக்காக நாங்கள் ஓட்டு கேட்டோம் எஸ்வி சேகர் என்ன செய்தார் என்று கேட்ட முதல்வர் பழனிச்சாமிக்கு பதிலளிக்கும் விதமாக எஸ் வி சேகர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் அதிமுக கொடி அதில் இருந்து அண்ணாவின் படத்தை நீக்கவேண்டும் என்றும் எஸ்வி சேகர் விமர்சனம் செய்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. அதனை அடுத்து அதிமுக எம்எல்ஏவாக இருந்த போது வாங்கிய சம்பளத்தை எஸ்வி சேகர் திருப்பித் தருவாரா? என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எஸ்வி சேகர்-ஜெயக்குமார் மோதல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ’எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும், அதனால் அவர் கேட்டதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மேலும் அது குறித்து பேசிய முதல்வர் ‘எஸ் வி சேகர் பாஜகவுல இருக்காரா? மோடி இந்தியாவின் பிரதமரா வரணும்னு நாங்க எல்லாரும் ஊர் ஊரா போய் ஓட்டி கேட்டோம். அவர் எங்காச்சும் பிரச்சாரம் பண்ணாரா?. அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் மற்றும் அதிமுகவினர் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் எஸ்வி சேகர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் ஓடி ஒளிபவன் இல்லை. என்னை எல்லோரும் பிராமன சத்ரியன் என்பார்கள். எனக்கு ஜான் பாண்டியன் முதல் நிறைய பேர் நண்ப்ர்களாக உள்ளனர். ஓட்டுக்கேட்க வரவில்லை என சொல்கிறார்கள். என்னைக் கூப்பிட்டால் வரப்போகிறேன். யாரோ முகம் தெரியாத ஒருவர் ஓட்டுக் கேட்க நான் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு இருக்க முடியுமா?

நான் என்ன செய்கிறேன் என்று மோடிக்கு தெரியும். நான் ஒரு போன் கால் போட்டு சொன்னாலே 5000 ஓட்டுகள் மாறும். அந்த அளவுக்கு எனக்கு செல்வாக்கு உள்ளது. ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments