Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மெரினாவில் பாய்மரப் படகு விளையாட்டு அகாடமி.! தமிழக அரசு திட்டம்.!!

Sailing Academy

Senthil Velan

, ஞாயிறு, 12 மே 2024 (16:52 IST)
சென்னை மெரினா கடற்கரையில் ரூ.7 கோடி செலவில் 2.75 ஏக்கர் பரப்பளவில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்க தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற  தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. மேலும், 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் படகு இல்லம் இருந்த இடத்தில் பாய்மர படகு அகாடமி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அதன் அடிப்படையில், தற்போது அந்த இடத்தில் கீழ்த்தளம் மற்றும் முதல் தளம் என்று இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் கீழ்த்தளத்தில் பயிற்சி அறை, வீடியோ நூலக அறை, வரவேற்பு அறை, பயிற்சியாளர்கள் அறை, அலுவலக அறை, படகு நிறுத்தும் இடம், திறந்தவெளி இடம் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.


கட்டடத்தின் முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை, வரவேற்பு அறை அமைய உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

CAA சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது.! பிரதமர் மோடியின் 5 உத்தரவாதம்.!!