Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார்: சரத்குமார்

sarathkumar
, செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:52 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தயார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கொங்கு மண்டலத்தில் கூட்டணி கட்சியின் வெற்றிகளுக்கு எனது பரப்புரையும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார். 
 
மேலும் கட்சி நிர்வாகிகள் விரும்பினால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்றும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சரத்குமாரும் போட்டியிடுவார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் நிலநடுக்கம்....ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆகப் பதிவு