சர்கார் அரசியல் சார்ந்த படம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்க அது ஆளும் கட்சியை அசைத்துப் பார்க்கும் படமாக இருக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் சர்கார் திரைப்படக் குழுவினரை தவிர.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே ஆளுங்கட்சி அதிமுக அரசின் அமைச்சர்களும், தலைவர்களும் பலவிதமான எதிர்ப்புகளை பதவி செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டேசென்றது.
இதில் முக்கியமாக இன்று பகல் வேளையில் சென்னையில் அதிமுக கட்சிகாரர்கள் சேர்ந்துகொண்டு சர்கார் திரைப்படம் ஓடுகின்ற தியேட்டரில் குரல் எழுப்பியதால் குழப்பம் ஏற்பட்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
அரசின் இலவச திட்டங்கள் பற்றி விமர்சிக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று மாலையில் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் சர்கார் படம் ஓடிகொண்டிருந்த போது அங்கு புகுந்த அதிமுக கட்சிக்காரர்கள் தியேட்டருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கட்அவுட் மற்றும் பேனர்களை கிழித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் போலிஸார் திரையரங்குகளில் குவிக்கப்பட்டு உள்ளனர்.