சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
நேற்று இரவு வந்த செய்தியின் அடிப்படையில் சசிகலா உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பெங்களூர் சிறையில் இருந்த சசிகலாவிற்கு நேற்று நள்ளிரவு திடீரென மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
சற்று முன் வெளியான தகவலின்படி சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவரது ஆதரவாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிறையிலிருந்து விடுதலை ஆக ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது