Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கழக பொதுச்செயலாளர் சசிக்கலா? எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கல்வெட்டு!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:20 IST)
அதிமுக பொன்விழாவான இன்று எம்.ஜிஆர் நினைவில்லத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் கழக பொதுசெயலாளர் சசிக்கலா என பொறிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1972ல் திமுகவிலிருந்து விலகிய எம்ஜிஆர் அதே ஆண்டு அக்டோபர் 17ம் நாளில் அதிமுக கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் கட்சி 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி அதிமுகவினர் பலரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் சசிக்கலா மரியாதை செலுத்தியதுடன் கல்வெட்டு ஒன்றையும் திறந்துவைத்தார். அதில் பொன்விழா ஆண்டு துவக்க நாள் கொடியை ஏற்றியவர் திருமதி வி.கே.சசிக்கலா, கழக பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நர்சரி பள்ளிகள் குறித்த அறிவிப்பு தவறானது! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!