ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு அதிமுக கட்சி கொடியுள்ள கார் கொடுத்ததாக 7 பேர் அதிரடியாக அதிமுக தலைமையால் நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா விரைவில் எல்லோரையும் சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.
தற்போது மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுத்துவரும் சசிகலா விரைவில் தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வழக்கறிஞர் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகாலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டுமென சென்னை சிவில் நீதிமன்றத்தில் இன்ரு சசிகலா தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.
இவ்வழக்கு அடுத்தமாதம் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.