Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடநாடு எஸ்டேட் எங்களுக்கு கோயில் - சசிகலா பேட்டி!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:02 IST)
கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு சாதாரண இடமாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு அது கோயில் என சசிகலா பேட்டி. 

 
கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்து உள்ளது. 
 
சசிகலாவிடம் முதல் நாள் விசாரணை: 
சசிகலாவுக்கு கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை விசாரணை தொடர்பாக சம்மன் அனுப்பட்டது. இதில் முதல் நாள் விசாரணை நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. கொடநாடு எஸ்டேட் எப்போது வாங்கப்பட்டது, எத்தனை பேர் பணி செய்கிறார்கள்? அந்த பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன, கொலை கொள்ளை நடந்த பிறகு சசிகலா ஏன் சென்று பார்க்கவில்லை என தனிப்படை அதிகாரிகள் கேள்வி கேட்டதாக தெரிகிறது. 
சசிகலாவிடம் இரண்டாம் நாள் விசாரணை: 
இன்று 2வது நாளாகவும் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் தனிப்படை போலீசார் கேட்டதாகவும் அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா பதில் கூறியதாகவும் சசிகலாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் சிலரையும் விசாரணைக்காக போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
கோடநாடு எங்களுக்கு கோயில்:  
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். மேலும் கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் சாதாரண இடமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது கோயில் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments