உக்ரைனிலிருந்து திரும்பி வரும் மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துவரும் போர் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பது மிகவும் கவலை அடைய செய்கிறது. உக்ரைனில் உள்ள அனைத்து மாணவர்களும் விரைவில் மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
அதே போன்று கல்வியை பாதியில் இருந்த இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலை அனைவரிடத்திலும் உள்ளது. இதுபோன்ற இக்கட்டான நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய கல்வி தடைபடாமல் அவரவர் மாநிலத்தில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மீண்டும் கல்வியைத் தொடரும் வகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பிரதமர் அவர்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.