கர்நாடக மாநிலம் தக்சின் கன்னடா மாவட்டத்தின் துணை ஆணயராக பதவி வகித்து வந்த செந்தில் இன்று தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியுலகில் ஐஏஎஸ் ஆவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு விடா முயற்சியும், அயராத படிப்பும் வேண்டு, இந்த ஆட்சியர் பணிக்கு ஆண்டுதோறும் இளைஞர்கள் தவமென காத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம், தக்சின் கன்னடா மாவட்ட துணை ஆணையர் பதவி வகித்துவந்தவர் சசிகாந்த் செந்தில் (40). தமிழகத்தைச் சேர்ந்த (சென்னை) இவர், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : ’இனிமேல் இங்கு சிவில் (ஐஏஎஸ்) அதிகாரியாக வேலை செய்வதைக் காட்டிலும், வெளியில் இருந்து வேலை செய்ய முடிவு செய்துள்ளேன் ’ என தெரிவித்துள்ளார்.