காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற கொடுத்த 6 வார கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
அதைத்தொடர்ந்து மத்திய அரசு, திட்டம் என்றால் என்னவென்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவசாம் கோரியும் மனு தாக்கல் செய்தது.
இந்த இரண்டு வழக்குகளும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்ப்பில் இல்லை என்றும், மே 3ஆம் தேதிக்கு வரைவு திட்டத்தை தயார் செய்து மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.