தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பழைய கட்டிடங்கள் இடியும் நிலையில் இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு பள்ளியின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது.
செங்கல்பட்டுக்கு அடுத்துள்ள ஒழலூர் என்ற பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக 2 மாடி பள்ளி கட்டடம் ஒன்றில் பள்ளி நடத்தி வரப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையில் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் உறுதி குறித்து ஏற்கனவே பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினர்களிடம் எச்சரிக்கை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.