Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருக்குற பாடத்தை முதல்ல சரியா நடத்துங்க! – ஆசிரியர்களை ஆஃப் செய்த செங்கோட்டையன்

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (09:22 IST)
அரசு பள்ளிகளில் இந்தியை விருப்பப்பாடமாக சேர்க்க ஆசிரியர் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகள் நடத்துவதாக அரசு அறிவித்திருந்தது. இதற்கு மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினர் இடையேயும் அதிர்ப்பு எழுந்தது. பலரின் கோரிக்கைகளை பரிசீலித்த அரசு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டும் இருந்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த முடிவை தமிழக அரசு எட்டியுள்ளது. மேலும் பொதுத்தேர்வுக்காக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களிடன் ஆசிரியர்கள் வசூலித்த தேர்வு கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும். தேர்வு ரத்தானதால் அந்த தொகையை திரும்ப தருவதுதான் ஆசிரியர்களின் கடமை” என்று கூறியுள்ளார்.

இந்தியை அரசு பள்ளிகளில் விருப்பப்பாடமாக சேர்ப்பது குறித்த ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு பதில் அளித்த அவர் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை சரியாக நடத்தினால் போதும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments