Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: திருவிழாக்களுக்கு அனுமதி இல்லை!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (08:00 IST)
நவம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தற்போது உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் அனைவரும் கொரோன வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது
 
 மேலும் திருவிழாக்கள் மற்றும் அரசியல் விழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments