Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் - அன்பில் மகேஷ் தகவல்!

12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் - அன்பில் மகேஷ் தகவல்!
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (08:40 IST)
திருச்சி, தஞ்சை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். 

 
கொரோனா காலத்தில் ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலான நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நவம்பர் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
 
இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
 
திருச்சி, தஞ்சை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். 6 மாத காலத்துக்கு தொடர்ந்து இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும். கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் உதவும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி முகாம்: வாரந்தோறும் அதிகரிக்கும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை!!