Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல்.! பாஜகவினருக்கு திருமாவளவன் பதிலடி..!!

Senthil Velan
புதன், 18 செப்டம்பர் 2024 (12:33 IST)
மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில், மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல் அது என்றும் பாஜகவினர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலில் அப்படி பேசுகிறார்கள் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
 
மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு கொடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சிறுத்தையாய் சீறியது என்றும் முதல்வரை சந்தித்ததும் சிறுத்தை சிறியதாக மாறிவிட்டது என்றும் இந்த நாடகம் தமிழ்நாடு மக்களிடம் எடுபடாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார். 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மூக்கறுபட்டவர்களின் கூச்சல், புலம்பல், கூக்குரல் இது, அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்று தெரிவித்தார். தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் 18 மாதங்கள் உள்ளன என்றும் அதற்குள், தேர்தல் கணக்கு, கூட்டணிக் கணக்கு என்று கூப்பாடு போட்டு, கூச்சல் எழுப்பினார்கள் என்றும் குறிப்பிட்டார்.

எப்படியாவது மேலும் விரிசல் அடையாதா, பிளவு ஏற்படாத என காத்திருந்தார்கள் என்று திருமாவளவன் கூறினார். ஆனால், ஏமாந்து போய்விட்டார்கள் என்றும் அதனால், ஏற்பட்ட விரக்திதான் இப்போது வெளிப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


ALSO READ: ராகுலின் பாதுகாப்பை பலப்படுத்துக.! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!
 
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே தங்களுக்கு எதிரான ஒரு அரசியலைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேசுகிறார்கள் என்பதை புரிந்தும் இந்த மாநாட்டுக்கு வருகிறார்கள் என்றால் விசிகவும், திமுகவும் ஒரே நேர்க்கோட்டில் கொள்கை அளவில் பயணிக்கிறது என்பதுதான் பொருள் என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல்.! பாஜகவினருக்கு திருமாவளவன் பதிலடி..!!

ராகுலின் பாதுகாப்பை பலப்படுத்துக.! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

எம்பிபிஎஸ் படிப்பில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் அபராதம்… மருத்துவக்கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை!

ஆப்பிள் ஐஃபோன் 1000 ரூபாய்? ப்ளிப்கார்ட்டில் நடந்த பலே மோசடி? - ட்ரெண்டாகும் #FlipkartScam

சென்னை கடற்கரை - விழுப்புரம் தொழில்நுட்ப பணி: 19 மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments