Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நெல்லையில் பிரபல மருத்துவமனைக்கு சீல்!

நெல்லையில் பிரபல மருத்துவமனைக்கு சீல்!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:57 IST)
மாநகராட்சி அதிகாரிகள் கண்களை மூடிக்கொண்டிருப்பதே விதிமீறல் கட்டடங்கள் முளைப்பதற்கு காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளியிட்டது. 
 
திருநெல்வேலி பெர்டின் ராயன் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி பெருமாள்புரத்தில் ஒரு மருத்துவமனை கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. வணிக கட்டடத்திற்கு அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர். சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையின் தடையில்லாச் சான்று பெறவில்லை. பொதுக் கட்டடத்திற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை.  கட்டடத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்றும் கட்டடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன் காணொலியில் திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் கண்ணன், நகர் ஊரமைப்பு இயக்கக இணை இயக்குனர் மதிவாணன் ஆஜராகினர். கமிஷனர்: கட்டடத்தில் மாறுபாடு உள்ளது. அனுமதியின்றி கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியுள்ளனர். அபராதம் விதித்து, கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். திருத்தியமைக்கப்பட்ட கட்டட வரைபடத்திற்கு அனுமதி கோரி மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. தற்போது கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர் என்றார்.
 
 அதற்கு நீதிபதிகள் மாநகராட்சியின் கீழ்நிலை அதிகாரிகள் கண்களை மூடிக்கொண்டிருப்பதே விதிமீறல் கட்டடங்கள் முளைப்பதற்கு காரணம். திருத்தியமைக்கப்பட்ட கட்டட வரைபட அனுமதி கோரிய விண்ணப்பத்தை நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு மாநகராட்சி கமிஷனர் அனுப்ப வேண்டும். அதை நகர் ஊரமைப்பு இயக்கக இணை இயக்குனர் மே 17 க்குள் ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்ஃபி புகழ் கொரில்லா: தன்னை மீட்டவரின் மடியில் உயிர்விட்ட சோகம்!