நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தின் போது திமுகவையும் திமுக தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரும் 19 ஆம் தேதி திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார் சீமான்.
சமீபத்தில், சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் விஜய ராகவன் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு...
ஆட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எடப்பாடி தரப்பு நினைக்கிறார்கள், அதை கவிழ்க்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பு நினைக்கிறார்கள். ஆனா நாங்கள் எப்படியாவது மக்களை காப்பாற்ற வேண்டும்னு நினைக்கிறோம்.
திராவிட கட்சிகள் எல்லாம் ஆட்சிக்கு வரவில்லை என்றால் சீமான் எல்லாம் இப்படி பேசிவிடுவாரா? படித்து இருப்பாரா என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். படிக்க வெச்சது எங்க தாத்தா காமராஜர்.. குடிக்க வெச்சது உங்க அப்பாவும், நீங்களும்தான்.
நான் வாய்ச்சொல் வீரனா சரி... அப்படின்னா ஸ்டாலின் வாள் சொல் வீரரா என்ன? நான் அதற்கும் தயார். வாள் சண்டையா, கம்புச் சண்டையா, கராத்தேயா... எதுவா இருந்தாலும் சரி. ஸ்டாலினா? உதயநிதி ஸ்டாலினா? யார் வந்தாலும் சரி, உங்களை ஒழிக்காமல் நான் போக மாட்டேன் என திமுகவை சீண்டி பார்த்துள்ளார்.