சீமானின் நாம் தமிழர் கட்சி மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறாததால்தான் கரும்பு விவசாயி சின்னம் அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை என்றும் இதனை அடுத்து மைக் சின்னத்தில் தான் அந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சிம் டெபாசிட் இழந்தாலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டு 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
பொது தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் செல்லுபடி ஆகும் வாக்குகளில் 8 சதவீதத்திற்கும் அதிகமாக பெற்றால் ஒரு கட்சி மாநில அந்தஸ்தை பெற்றுவிடும் என்ற நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தற்போது மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. எனவே இனிமேல் அந்த கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.