Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள், முக்கியமா மோடி.. சீமான் சொல்ல வருவது என்ன??

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (09:32 IST)
எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள் என எல்லாருக்கும் நுழைவுத்தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை வைத்து எழுத சொல்ல வேண்டும் என சீமான் பேச்சு. 
 
நீட் தேர்வு விவகாரம் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட பின் பரபரப்பின் உச்சத்தில் சென்றது. அதோடு இந்த விவகாரம் இன்று சட்டசபையில் கடும் வாக்குவாதமாக மாறியது. 
 
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது, இந்த நாட்டை அளுகின்றவர்கள், சட்டங்கள் வகுப்பவர்கள் எந்த கல்வி படித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது, எந்த தேர்வு எழுதினார்கள் என்று கூட தெரியாது. 
 
எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள் என எல்லாருக்கும் நுழைவுத்தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை வைத்து எழுத சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தாக் நாட்டில் மிகத்தகுதியான அமைச்சர் பெருமக்கள் வருவார்கள் என நான் நினைக்கிறேன், அதிலும் மிக முக்கியமாக பிரதமர் மோடியை தேர்வு எழுத வைக்க வேண்டும், அதன்பிறகு கல்வி அமைச்சர் எழுத வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments