ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த சாந்தன் என்பவர் இன்று காலமான நிலையில் அவரது மரணம் சட்ட கொலை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
33 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் சட்ட போராட்டம் நடத்திய சாந்தன் சாவை பார்க்கவா இருந்தார்? என்றும் விடுதலை விடுதலை என்று போராடி சாந்தனின் சாவை தான் என்று நாம் பார்த்து உள்ளோம் என்றும் பொது சிறையிலிருந்து விடுதலையாகி கொடுஞ்சிறையில் அடைத்துள்ளார்கள் என்றும் அதற்காகவா இத்தனை ஆண்டுகள் போராடினார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
சாந்தனின் கடைசி விருப்பம் தனது தாயை பார்க்க வேண்டும் என்பதுதான் என்றும் அதை கூட நிறைவேற்றவில்லை என்றும் சாந்தன் இறப்பு திரைப்படங்களில் வரக்கூடிய உச்சக்காட்சியை போல் உள்ளது என்றும் இன்று இரவு விடுதலை ஆகக் கூடிய நிலையில் இன்று காலை உயிரிழந்த என்றும் இது மரணம் இல்லை சட்டக்கொலை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
மீதி இருக்கும் மூன்று பேரையும் இந்த நிலைக்கு தள்ளாமல் அவரவர் நாட்டுக்கு திரும்பி அனுப்ப வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.