இன்று உலக பூமி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் இயற்கையை காப்பதன் அவசியம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகத்தின் இயற்கை வளங்களை காப்பது குறித்தும், உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் உலக பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது.
உலக பூமி தினத்தையொட்டி சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலரும் இயற்கை வளங்கள் குறிது பேசியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தான் கட்சி கூட்டம் ஒன்றில் இயற்கை குறித்து பேசியுள்ல வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள அவர் “மண்ணை வாழவைக்காது; மரம், செடி, கொடி, நீர்நிலைகளை பாதுக்காக்காது; பூச்சிகள், வண்டுகள், பறவைகள், விலங்குகள் இவற்றை வாழவைக்காது; இங்கு வாழும் ஒற்றை உயிரினமான மனிதனை வாழவைக்கவே முடியாது!” என்று குறிப்பிட்டுள்ளார்.