Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலைக்கு நப்பாசை இருக்கிறது… செல்லூர் ராஜு காட்டம்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:24 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உடைந்து தனித்தனியாக போட்டியிடுகின்றன. அதிலிருந்து பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் காரசாரமாக பேசி வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ‘இந்த தேர்தல் திமுகவுக்கும் பாஜகவுக்கும் நடக்கும் தேர்தல்’ என்று பேசியிருந்தார்.

அப்படி பேசியது பற்றி கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ‘பாஜகவின் அளவு என்ன என்பது அவருக்கு தெரியும். தேர்தல் முடிவு அவர்களுக்கு பாடம் கற்பிக்கும். அண்ணாமலைக்கு இருக்கும் நப்பாசையால் ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார். பெரியார், அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட பூமி இது. இதை ஆளுகின்ற பொறுப்பை மக்கள் திராவிட இயக்கங்களுக்குதான் அளித்துள்ளனர். அண்ணாமலை என்ன பேசினாலும் மக்கள் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள்’ எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments