வீடுகளில் மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று மாதம்தோறும் மின் கணக்கீடு வீடுகளுக்கு எடுக்கப்படும் என்பது தான்
ஆனால் இதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மின்சார கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கு மாதம்தோறும் மின்கட்டண கடைக்கு விடுமுறை எப்போது என்பது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்
வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இந்த பணி முடிந்த பிறகு வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கணக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்
இதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்த பின்னர் வீடுகளில் சுமார் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்