பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்ற நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மனுவில் வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கவில்லை. மேலும் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை ஜூன் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக செந்தில் பாலாஜி வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.