Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல திட்டங்களை வேண்டாம் என போராடும் கட்சிகள்: நடிகர் செந்தில் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:33 IST)
மத்திய அரசுக்கு எந்த நலத் திட்டங்களை கொண்டு வந்தாலும் சில கட்சியினர் வேண்டாம் என்று போராடி வருவதாக நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்
 
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கன்னியாகுமரி எம்.ஆர்.காந்தி மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் செந்தில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் 
 
அப்போது பேசிய அவர் குமரி மாவட்டத்தில் கிடப்பில் கிடக்கும் இரட்டைப் வழிப்பாதையை  மீண்டும் தொடங்கும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சில கட்சிகள் மத்திய அரசு எந்த நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் வேண்டாமென தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தான் கட்சியின் பெயரையும் தலைவரின் பெயரையும் சொல்ல விரும்பவில்லை என்றும் அதனை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றும் செந்தில் பேசினார்.
 
அதிமுகவில் இருந்த நடிகர் செந்தில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார் என்பதும் அதன் பின்னர் சமீபத்தில் அவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments