Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்வார்பேட்டையில் பேரிகார்டுகள் உடைப்பு - மெரினாவில் இடம் தர மறுத்ததால் திமுக தொண்டர்கள் கொந்தளிப்பு

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (20:45 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர மறுத்ததால் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். 
 
மெரினாவில் கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதான சாலை முகப்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய தயார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதனால் ஆத்திரமடைந்த திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் போராட்டம், நடத்தி வருகின்றனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது.  ஆழ்வார்பேட்டையில் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஸ்டாலின் தொண்டர்களை அமைதி காக்க வலியியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments