ராகுல்காந்தி-மதுரை மாணவி சந்திப்பு, எல்லாமே செட்டப்பா?
சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தார் என்பதும் அதன் பின்னர் மதுரை அருகே நடந்த பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக மதிய உணவு சாப்பிட்டார் என்ற செய்தியும் வெளியானது
இந்த நிலையில் ராகுல் காந்தியின் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் ராகுல்காந்தி சகஜமாக பேசியதாகவும் அவரது குடும்பத்தை பற்றி விசாரித்து, நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியுடன் அந்த மாணவியின் சந்திப்பு முழுக்க முழுக்க செட்டப் என பாஜக பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த மாணவி அந்த பகுதியில் உள்ள திமுக கவுன்சிலர் ஒருவரின் மகள் என்றும் அவர்களுடைய குடும்பமே திமுகவை சேர்ந்தவர்கள் என்றும் ராகுல் காந்தி அருகில் தனது மகளை உட்கார வைக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து செட்டப் செய்யப்பட்டது என்றும் போட்டோசூட்டும் திட்டமிட்டே எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
எனவே அனைத்தும் செட்டப் தான் என்றும் தற்செயலாக நடந்த சந்திப்பு கிடையாது என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்