கோவையில் உள்ள தனியார் பேருந்தில் ஷர்மிளா என்ற பெண் டிரைவராக பணி செய்து கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்தில் இன்று காலை திமுக எம்பி கனிமொழி பயணம் செய்தார்.
ஓட்டுநர் ஷர்மிளா உள்பட அந்த பேருந்தில் பயணம் செய்த பலரிடம் கனிமொழி பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஓட்டுனர் ஷார்மிளாவுக்கும் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து ஷர்மிளா பேட்டி அளித்த போது தன் மேல் எந்த தவறும் இல்லை என்றும் கனிமொழி வருவதை ஏற்கனவே நான் நிர்வாகத்திடம் கூறி இருந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு பேட்டி அளித்த போது நான் ஷர்மிளாவை வேலை நீக்கம் செய்யவில்லை என்றும் அவரே தான் ராஜினாமா செய்து விட்டு போய்விட்டார் என்றும் தெரிவித்தார்.