அருந்ததிய மக்களை இழிவுபடுத்தும் சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட தமிழர் கட்சியினர் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது அருந்ததிய மக்களை வந்தேறிகள் என பேசினார். இதனையடுத்து அருந்ததிய அமைப்புகள் சீமானை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீதும் கற்கள் வீசப்பட்டது. தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாதிய ரீதியாகவும், மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்கும் விதமாகவும், அருந்ததிய மக்களை இழிவுபடுத்தி இட ஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தி சீமான் பேசுவதை கண்டித்து திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோசங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சீமானின் உருவபொம்மையை எரிந்தனர். காவல் துறையினர் உருவபொம்மை பாதி எரிந்த நிலையில் கைப்பற்றி , தண்ணீர் கொண்டு அனைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.