பஸ் ஸ்டிரைக்கை பயன்படுத்தி பன்மடங்கு வரை கொள்ளையடிக்கும் சில ஆட்டோ ஓட்டுனர்களால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
சம்பள உயர்வு குறித்து தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நேற்று மாலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. ஒரு சில பேருந்துகளை ஓட்டுனர்கள் பாதியில் நிறுத்திவிட்டு பேருந்துகளை இயக்க மறுத்ததால் நடுவழியில் பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதனால் தமிழ்நாடு முழுவதும் வேலை முடிந்து விட்டு வீடு செல்லவும், சொந்த ஊருக்கு செல்லவும் முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த வேலை நிறுத்ததால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த சந்திரப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் பேருந்துகளும், ஆட்டோ ஓட்டுனர்களும் வழக்கத்தை விட பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு இடஞ்சலை உருவாக்கியுள்ளனர். வேறு வழியின்றி அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து பயணிக்கும் சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.