ஸ்ரீமதி கொலையை மறைப்பதற்காக பல வீடியோக்களை யூடியூப் சேனல் ஒன்று பதிவு செய்து வருவதாக ஸ்ரீமதி பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் என்ற பகுதியில் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார்
இது கொலை என்று மாணவியின் பெற்றோர்கள் கூறிவரும் நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் இது கொலை அல்ல என்று தெரிவித்திருந்தது
இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்று பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் கொலையை மறைப்பதற்காக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் ஸ்ரீமதி தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார் அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது