தமிழகத்தில் வேலை வாய்ப்புகளில் அதிகளவு வடமாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் அதிகளவில் வடமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சமூகவலைதளங்களில் தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரண்ட் ஆனது.
இதுகுறித்து இப்போது பேசியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ‘தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப்பறிக்கும் செயல் பாஜக ஆட்சியில் பெருகிவிட்டது. தமிழகத்தில் உள்ள வேலைகளில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கே வேலை வாய்ப்பை வழங்கச் செயவதே திமுகவின் நோக்கம். இத்தகைய செயல்கள் பச்சைத் துரோகமாகும். இந்த செயல்களில் ஈடுபடும் மத்திய மாநில அரசுகளைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.