Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி !!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (17:49 IST)
பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி !!

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 12 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு அவர் மறைந்தார்.
 
தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த  அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், தற்போது பேராசியர் அன்பழகன் உடல் அங்கலரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
 
அதன்பிறகு, கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட கொண்டுவரப்பட்டு, அவரது உடல் தற்போது தகனம் செய்யப்பட்டது.
 
அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், வைரமுத்து, திருச்சி சிவா, டி;ஆர் பாலு, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கதறி அழுது இறுதி அஞ்சலி செலுத்தினர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments