Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி!

J.Durai
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (17:55 IST)
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் 19 வது ஆண்டு விழாவை முன்னிட்டு  சய  ஷிகான் ஷோட்டோகான் 2 வது  மாநில அளவிலான கராத்தே போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள டான் போஸ்கோ  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
 
மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக  நடந்த இந்த போட்டியில் திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், கோவை, வேலூர், ஈரோடு, கரூர், மதுரை, கன்னியாகுமரி உள்பட மாநிலம் முழுவதிலும்  வீரர்-வீராங்கனைகள் ஆர்வமுடன்  கலந்து கொண்டனர்.
 
இதில் 5 முதல் 25 வயது பிரிவு   மற்றும் உடல் எடை பிரிவில் நடத்தப்பெற்ற இந்த போட்டியில் கட்டா மற்றும் குமுத்தே என்ற போட்டி பிரிவில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை பெற்றனர். 
 
முன்னதாக போட்டிகளை,
கோயம்புத்தூர் ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி சங்கத் தலைவர்  கார்த்திகேயன், செயலர் ராஜா ஆகியோர்கள் துவக்கி வைத்தனர்.
 
இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவில் கராத்தே போட்டியில் தமிழக அணிக்காக  பங்குபெற உள்ளதாக,போட்டியின் ஒருங்கிணைப்பாளரும்  மைகராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியின் தலைவர்  சென்சாய் தியாகு நாகராஜ் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments