ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினிகாந்துக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் நடிகர் ரஜினி முன்னதாக தூத்துக்குடி சென்ற போது, இது சமூக விரோத சக்திகளால் நடத்தப்பட்டது என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராக சொல்லி நடிகர் ரஜினிகாந்துக்கு முன்னதாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில் மீண்டும் அவரை வரும் ஜனவரி 19ம் தேதி ஆஜராக சொல்லி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ரஜினி தனது கட்சி பணிகளில் முழுதாக ஈடுபட உள்ள நிலையில் இந்த விவகாரம் இடையூறை ஏற்படுத்தலாம் என கருத்தப்படுகிறது.