ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் : பிரபல நடிகரின் பேட்டி...
, வெள்ளி, 5 அக்டோபர் 2018 (13:23 IST)
தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் திரளாக கலந்துகொண்டு பேரணியாக சென்ற போது ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயம் அடைந்தனர் ஒரு மாணவி துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
இதனையடுத்து வேதாந்தா குழுமத்தினர் நடத்தி வரும் ஸ்டெர் லைட் ஆலையை மூட வேண்டுமென்று கோர்டும் ஆணையிட்டது.
இது நடந்து சில மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவது குறித்த அறிவிப்புகள் செய்திதாள்களில் வேதாந்தா குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டு வந்தன மறுபடியும் ஸ்டெர் லைட் ஆலை இயங்கினால் மக்களுக்கு தொடர்ந்து சுகாதாரக் கேடுகள், உடல் நலக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பல அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
“ஸ்டெர்லைட் ஆலை குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மத்திய குழுவிடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நீதி மையம் சார்பில்மனு அளிக்கவுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் எங்களின் முடிவாகும். மக்களின் நலன் பாதிக்கும் ஆலை இங்கு தேவையில்லை” இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்