Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக் கடலில் உருவானது ‘ஆம்பன்’ புயல்! - வானிலை மையம் இயக்குநர் தகவல்

Webdunia
சனி, 16 மே 2020 (19:37 IST)
வங்க கடலில் சில நாட்களுக்கு முன்பாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததை தொடர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது இதனைத்தொடர்ந்து புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

இந்த புயல் நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும், பின்னர் திசையை மாற்றி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். 20 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

இதனால் தமிழகத்தில் நேரடி மழை இருக்காது, ஆனால் புயல் விலகி செல்வதால் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். தற்போதைய தகவலின் படி வட தமிழகத்தில் 2 - 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளதாவது ;

தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 16கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும்.இந்தப்புயலானது மே 20 ஆம் தேதி வங்கக் கடல், மேற்குவங்கத்தை ஒட்டிய பகுதிகளில் ஆம்பன் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!

வேலூர் சிறைத்துறை டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! கைதி சித்ரவதை விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை.!!

தமிழகம், புதுவையில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சமோசாவில் தவளையின் கால்.! மிரண்டு போன வாடிக்கையாளர்..!!

வயநாடு நிலச்சரிவில் மிஞ்சிய ஒரே ஒரு உறவும் சாலை விபத்தில் மரணம்.. அனாதையான இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments