தமிழகத்தில் 88 மதிப்பெண்கள் வாங்கிய மாணவருக்கு 58 மதிப்பெண் போடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிளஸ் 2 தேர்வுகள் முடிவு வெளியான நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
தமிழ் பாடத்தில் மதிப்பெண் மிகவும் குறைவாக இருப்பதாக கருதிய மாணவர் ஒருவர் மறு கூட்டலுக்காக பணம் செலுத்தி விடைத்தாளை நகல் பெற்ற போது அந்த மாணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த மாணவருக்கு தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்கள் கிடைத்துள்ள நிலையில் அந்த விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 58 மதிப்பெண்கள் மட்டுமே கவனக்குறைவாக போட்டது தெரிய வந்துள்ளது . இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த மாணவனுக்கு மறு கூட்டலுக்காக வாங்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுத்து சம்பந்தப்பட்ட பேப்பர் திருத்தி ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தேர்வுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இது குறித்து நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.